மாதவிடாய் ஆரம்பம் முதல் இறுதி வரை

மாதவிடாய் சாதாரணமாக 09 முதல் 16 வயதிற்கு இடைப்பட்ட காலத்தில் ஆரம்பித்து மெனோபாஸ் என அழைக்கப்படும் மாதவிடாய் நிறுத்தம் சுமார் 40களின் இறுதி 50 களின் ஆரம்பம் வரை ஒருவரின் வாழ்வில் குறிப்பிடத்தக்க காலகட்டத்திற்கு அவரின் வாழ்வின் ஒரு அங்கமாக நீடிக்கும்.

மாதவிடாய் என்பது ஒரு பெண்ணின் இனப்பெருக்கத் தொகுதியையுடைய ஒரு நபரின் வாழ்வில் ஏற்படும் ஒரு இயற்கையான மற்றும் அத்தியாவசியமானதொரு செயற்பாடாகும். இலங்கையின் சனத்தொகையின் 52% மானோர் பெண்கள் ஆவர். இதில் நாம் எண்ணிக்கையின் படி பார்க்கப்போனால் சுமார் 5.7 மில்லியன் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுகின்றது.

இலங்கை போன்ற சில நாடுகளில் ஒருவரின் முதலாம் மாதவிடாய் கலாச்சார ரீதியில் ஒருவரின் வாழ்வின் முக்கிய நிகழ்வாக கருதப்படுகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் பெற்றோர் ஒரு கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்து பல சம்பிரதாயங்கள் மற்றும் சடங்குகள் பின்பற்றப்படுகின்றன. இவ்வாறு பின்பற்றப்படும் சடங்குகள் அனைத்தும் விஞ்ஞான பூர்வமானவை அல்ல எனவே இச் சடங்குகளை நாம் மதிக்கும் போதிலும் இவற்றை சடங்காச்சாரமாக மட்டுமே கருதுவது முக்கியமானது.

பொதுவான மாதவிடாய் சக்கரம் 28 நாட்களை கொண்டதாக அமையும். எனினும் இது நபருக்கு நபர் வேறுபடக்கூடும். சிலருக்கு 21 நாள் சக்கரமாக இருக்கலாம் சிலருக்கு அது 35 நாள் வரை நீடிக்கும் சக்கரமாகவும் இருக்கலாம். மற்றும் இந்த சக்கரத்தின் நாட்களின் எண்ணிக்கை மாதாமாதம் வேறுபடவும் கூடும். மாதவிடாய் சக்கரத்தில் புரோஜெஸ்டரோன் மற்றும் ஈஸ்ட்ரஜன் ஹோர்மோன்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இந்த ஹோர்மோன் செயற்பாடுகளின் மூலம் எதிர்காலத்தில் ஒரு கருவை சுமக்க கருப்பையின் உட்சுவர்கள் தடிப்பமடைவதன் மூலம் தயாராகின்றது. கர்ப்பம் ஏற்படாத போது கருப்பை உட்சுவர் உடைந்து உடலில் இருந்து வெளியேறுகின்றது

சாதாரணமாக மாதவிடாய் 2 - 7 நாட்கள் வரை நீடிக்கும். மாதவிடாய் இரத்தத்தின் நிறம் மற்றும் அதன் தன்மை நபருக்கு நபர் வேறுபடக்கூடும்.

மாதவிடாய் ஒரு இயற்கையான செயற்பாடாகும், அனைவரும் இது தொடர்பான அறிவை பெற்றுக்கொள்ள வேண்டும். எம் மாதவிடாய் சக்கரத்தின் தன்மை மற்றும் ஹார்மோன்களின் செயற்பாடுகள் குறித்து அறிந்துகொள்வதன் மூலம் நாம் எம் மாதவிடாயை சிறப்பாக திட்டமிட்டு கையாளலாம்.

மாதவிடாய் சுகாதாரம் மற்றும் பயன்படுத்தும் பொருட்கள்.

மாதவிடாயின் போது சரியான ஆரோக்கியத்தை, சுத்தம், சுகாதாரத்தை பேணுவது ஒருவரின் உடல் மற்றும் உள ரீதியான நல்வாழ்விற்கு அவசியமானதாகின்றது. அது தொடர்பில் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் சில பின்வருமாறு:

தனி நபர் சுகாதாரம்: மாதவிடாய் நாட்களில் உங்கள் தனிப்பட்ட சுத்தம் மற்றும் சுகாதாரத்தை சரியான முறையில் முன்னெடுத்து பேணுவது மிகவும் முக்கியமாகும். உங்கள் மாதவிடாய் சுகாதார பொருட்களை நேரத்திற்கு மாற்றுவது (சாதாரணமாக 4 -6 மணித்தியாலங்களுக்கு ஒரு முறை) இந்த சுகாதார பொருட்களை தொடுமுன் மற்றும் தொட்டபின் உங்கள் கைகளை கழுவுதல், மற்றும் மிருதுவான சோப்பு மற்றும் தண்ணீரினால் உங்கள் பிறப்புறுப்புக்களை மென்மையாக கழுவுதல் போன்றவை இதில் உள்ளடங்கும். உங்கள் சுகாதாரப்பொருட்களை மாற்றுவதற்கான கால அளவு நீங்கள் பயன்படுத்தும் பொருளின் வகை, உங்கள் மாதவிடாய் இரத்தப்போக்கின் அளவு மற்றும் உங்கள் மாதவிடாய் நாளினை பொறுத்து அமையும்.

மாதவிடாய் சுகாதார பொருட்கள்: ஒவ்வொருவரினதும் வெவ்வேறு விருப்பங்கள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ற வெவ்வேறு மாதவிடாய் சுகாதார பொருட்கள் காணப்படுகின்றன.

மாதவிடாய் துவாய் (Pad)

உள்ளாடையில் ஒட்டக்கூடிய ஈரத்தை உறிஞ்சும் தன்மையுடைய ஒரு அணை அல்லது துவாய். ஒருமுறை மட்டும் பாவித்து அகற்றப்பட வேண்டியது.

டம்பொன்

பஞ்சினால் செய்யப்பட்ட உறிஞ்சும் தன்மையுடைய யோனிக்குள் உட்செலுத்தக்கூடிய, சிறு உருளை போன்ற வடிவத்தை கொண்டது.

மாதவிடாய் கோப்பை

இது யோனிக்குள் உட்செலுத்தக்கூடிய சிலிகான் அல்லது இறப்பரினால் செய்யப்பட்ட சிறு கோப்பையாகும். அதை உட்செலுத்தியதன் பின் அது உள்ளிருந்து வெளியேறும் இரத்தத்தை சேகரிக்கிறது. எட்டு மணித்தியாலங்களின் பின் அதை கழற்றி அதிலுள்ள இரத்தத்தை அகற்றி பின்னர் மீண்டும் அதை பயன்படுத்தலாம்.

மாதவிடாய் உள்ளாடை

மாதவிடாய் இரத்தத்தை உறிஞ்சும் வகையில் வடிவமைக்கப்பட்ட சிறப்பு உள்ளாடைகள்.

துணியினால் ஆன துவாய்

பருத்தி அல்லது உறிஞ்சும் தன்மையுடைய துணிகளை அடுக்குகளாக வைத்து தயாரிக்கப்பட்ட துவாய்கள். பாவித்தபின் நன்றாக கழுவி வெயிலில் உலர்த்திய பின் மீண்டும் பாவிக்கலாம்.

So, do you think you know about this leason?

Challenge yourself and your friends to test your knowledge, take the quiz

In trouble?

Find those who will help

Access to these contraceptives is made easy through public hospitals and health centers where they are provided for free. Families can talk to doctors and nurses to learn about.

1983 : call free helpline to eradicate violence against women

Related Reading