கட்டிளமைப் பருவத்திற்கு முகம் கொடுப்போம்

கட்டிளமைப்பருவத்தில் ஏற்படும் உடலியல் மற்றும் உளவியல் மாற்றங்கள்.

10 - 19 வயதிற்குட்பட்ட காலகட்டம் கட்டிளமைப்பருவம் என அழைக்கப்படுகின்றது. இக்கால கட்டத்தில் இரண்டாம் நிலை பாலியல் பண்புகள் வெளிப்படத் தொடங்குகின்றன. அதாவது, இக்கால கட்டத்தில் எம் உடல் மற்றும் உணர்வுகளில் மாற்றங்கள் ஏற்படுவது போலவே நாம் மற்றவர்களுடன் ஏற்படுத்தும் உறவுகள் மற்றும் தொடர்புகளிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

சரியான அளவா இருந்த டீ ஷர்ட் திடீர்னு இறுக்கமாகிருச்சா? உங்களுக்கு தெரியாமலேயே ஸ்கூல் யூனிபார்ம் கட்டையாகிருச்சா?
பிள்ளைப்பருவத்தில் இருந்து கட்டிளமைப்பருவத்திற்குள் வரும்போது எமது உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.
இந்த காலகட்டத்தில் ஏற்படும் முக்கிய மாற்றம், பெண் பிள்ளைகளின் கருமுட்டைகள் அல்லது சூழ் முதிர்ச்சியடைதல் மற்றும் ஆண் பிள்ளைகளின் விதைப்பையில் விந்து உற்பத்தி ஆரம்பமாவதும் ஆகும்.
இந்த மாற்றங்களுக்கு காரணமாக அமைவது உடலில் சுரக்கும் ஹோர்மோன்களாகும். பெண் பிள்ளைகளின் உடலில் சுரக்கும் ஹோர்மோன்கள் ஈஸ்ட்ரஜன் மற்றும் புரோஜெஸ்டரோன் அத்துடன் ஆண் பிள்ளைகளின் உடலில் டெஸ்டெஸ்டரோன் ஹோர்மோன் சுரக்கின்றது.
இந்த ஹோர்மோன்களினால் ஏற்படும் சில மாற்றங்கள் ஆண் பிள்ளைகளுக்கு மட்டுமே ஏற்படும். வேறு சில மாற்றங்கள் பெண் பிள்ளைகளுக்கு மட்டும் ஏற்படும்.

பெண் பிள்ளைகளுக்கு ஏற்படும் உடலியல் மாற்றங்கள்

* உயரம் மற்றும் நிறை அதிகரித்தல்

* மார்பகங்கள் வளருதல்

* சருமம் ஒளிர்வடைதல்

* இடுப்பு விரிவாதல்

* தொடை பெரிதாகும்

* அக்குள் மற்றும் பிறப்புறுப்பு பகுதிகளில் உரோமம் வளர்த்தல்

* முகத்தில் முகப்பரு ஏற்படல்

* யோனித் திரவம் ஏற்படல்

* மாதவிடாய் ஆரம்பமாதல்

ஆண் பிள்ளைகளில் ஏற்படும் உடலியல் மாற்றங்கள்

* உயரம் மற்றும் நிறை அதிகரித்தல்

* ஆணுறுப்பு, விதைப்பைகள், புரஸ்டேட் வளர்ச்சியடைதல்

* தோள்பட்டை அகலமாதல்

* தொடைகள் மற்றும் கைகள் பெரிதாக்குதல்

* மார்பு, அக்குள், பிறப்புறுப்பு பகுதிகளில் உரோமம் வளர்த்தல்

* முகப்பரு ஏற்படல்

* குரல்வளை முடிச்சு வெளியே தள்ளி காணப்படல்

* குரல் மாற்றமடைதல்

* தாடி மீசை வளர்தல்

* விந்து வெளியேற்றம் ஆரம்பமாதல்

இந்த கால கட்டத்தில் உடலியல் ரீதியான மாற்றங்கள் மட்டுமல்ல உளவியல் ரீதியான மாற்றங்களும் ஏற்படுகின்றன.

* உணர்வுகளில் மனநிலை அடிக்கடி மாற்றமடைதல்

* அதிகமாக உணர்ச்சிவசப்படல்

* தர்க்க ரீதியாக சிந்திக்க முனைதல்

* விஞ்ஞான ரீதியாக சிந்திக்க விளக்கங்களை கோர முனைதல்

* புதிய விடையங்களை முயற்சித்து பார்க்க ஆர்வம் கொள்ளல்

* புதிய கண்டுபிடிப்புகளை செய்ய ஆர்வம் ஏற்படல்

* உடற் தோற்றம், வடிவம், உடைகள், சிகையலங்காரம் போன்றவற்றில் ஆர்வம் காண்பித்தல்.

* தைரியமாக செயற்படல் போன்றவை

இவ்வாறான உடலியல் மற்றும் உளவியல் ரீதியான மாற்றங்களுடன் நாம் இக்காலத்தில் சமூகத்தில் பழகும் செயற்படும் விதமும் மாற்றமடையும்.

* காதல் உணர்வுகள் வெளிப்படும்

* சம வயதினருடன் பழகுவதை விரும்புகின்றனர்

* குழுவாக செயற்பாடுகளில் ஈடுபட முனைதல்

* அநீதி / நியாயமின்மைக்கு எதிராக செயற்பட விளைதல்

* பொது நடவடிக்கைகளில் ஈடுபட விரும்புதல்

* வயது வந்தோரின் சமூகத்திற்குள் நுழைய விரும்புதல்

* மற்றவர்களிடையே தம்மை தனித்துவமாக காண்பிக்க விரும்புதல்

* தலைமைத்துவத்தை ஏற்க விரும்புதல்

* போன்றவை அவற்றில் சில

இந்த மாற்றங்களைப் நீங்களும் உணருகின்றீர்களா?

இந்த மாற்றங்கள் முதலில் ஏற்படத் தொடங்கும் வயது மற்றும் அவை நிகழும் நேரமும் நபருக்கு நபர் மாறுபடும். அதனால்தான், உங்கள் சம வயதினருடைய வளர்ச்சியுடன் உங்கள் வளர்ச்சியை ஒப்பிட்டுப் பார்க்காதிருப்பது முக்கியம். உங்கள் சொந்த வளர்ச்சி வேகத்தில் நீங்கள் வளர்ந்து முதிர்ச்சியடையுங்கள்.

இது புதிய உணர்வுகள், புதிய ஆசைகள், புதிய நண்பர்கள் மற்றும் புதிய சவால்கள் நிறைந்த காலம். கட்டிளமைப்படருவத்தின் அழகை நீங்கள் முழுமையாக அனுபவிக்க இடமளிக்க யொவுன் பியச தயாராக உள்ளது.


பூப்படையும் போது ஏற்படும் சில உளவியல் சமூக மாற்றங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. அதிகமாக உணர்ச்சிவசப்படல்

இந்த காலகட்டத்தில், நம் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன, இதனால் ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் வெளிப்புற வேறுபாடுகள் காரணமாக நாம் அதிகப்படியான உணர்ச்சிகளை உணரலாம். இதனால் அடிக்கடி கோபம் வரலாம்.

2. தனக்கான அடையாளத்தை தனித்துவத்தை தேடுதல்

இந்த காலத்தில் நீங்கள் கட்டிளமைப்பருவத்தை அடைவதால் (பதின்வயதுப் பருவம்), மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் மற்றும் ஒரு நபராக நீங்கள் எவ்வாறு தனித்து நிற்கிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியத்தை நீங்கள் உணரலாம். மேலும், கட்டிளமைப்பருவத்தின் போது, ​​உங்கள் குடும்பத்தினருடன் இருப்பதை விட உங்கள் நண்பர்களுடன் அதிக நேரத்தை செலவிட நீங்கள் விரும்புவீர்கள். உங்களைப் போலவே உங்கள் நண்பர்களும் இந்த மாற்றங்களை சந்தித்து வருவதனால் நீங்கள் அவர்களுடன் இருக்க விரும்பலாம். மற்றும் உங்கள் பெற்றோர் நீங்கள் எதிர்கொள்ளும் மாற்றங்களை புரிந்து கொள்ளவில்லை என்ற உணர்வும் ஏற்படலாம். இக்காலத்தில் இவர்கள் மற்றவர்களிடையே எவ்வாறு வேறுபட்டு தனித்துவமாக இருக்கின்றீர்கள் மற்றும் சமவயதினரிடையே நன்மதிப்பை பெறுவதையும் நாடுகின்றனர். இது பெற்றோர் மற்றும் குடும்பத்தில் இருந்து சுதந்திரமாக செயற்பட ஆரம்பிப்பதன் ஒரு பகுதியாகும். இது இயற்கையான வளர்ச்சியின் ஒரு பகுதியாகும். எல்லா சந்தர்ப்பங்களிலும் உங்களுக்கு ஆதரவு வழங்க உங்கள் குடும்பம் உங்களுடன் இருக்கின்றது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். எனவே உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் நம்பிக்கைக்குரிய ஒரு வயது வந்தவருடன் கதைக்கவும்.

3. எதிர்காலத்தை குரித்த ஆசை எதிர்பார்ப்பு ஏற்படல்

பூப்படையும் பருவமனது பிள்ளைப்பருவமோ அல்லது இளமைப்பருவமோ அல்ல, இது அவை இரண்டிற்கு இடைப்பட்ட ஒரு காலப்பகுதி. எனவே, சில நேரங்களில் நீங்கள் நிச்சயமற்ற நிலையை உணரலாம். இந்த நேரத்தில், உங்கள் எதிர்கால தொழில், திருமணம், குழந்தை பெறுதல் போன்றவற்றைப் பற்றி நீங்கள் சிந்திக்க ஆரம்பிக்கலாம் மற்றும் அது குறித்த கனவுகளை வளர்க்கலாம். இவை அனைத்தும் உங்கள் வாழ்வில் புதிய தலைப்புகளாக இருக்கும், அவற்றைப் பற்றி நீங்கள் சிந்திக்கும் போது, ​​​​எதிர்காலத்தை பற்றிய எதிர்பார்ப்பு மற்றும் ஆசை உங்கள் மனதில் எழும்.

இந்த நேரத்தில் உங்களைப் பற்றிய உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கியவர்களின் எதிர்பார்ப்புகளும் மாறலாம். வழக்கத்தை விட அதிக பொறுப்புகள் உங்களுக்கு வழங்கப்படலாம். காலப்போக்கில் இந்த நிச்சயமற்ற தன்மை மாறி தம்மை பற்றிய ஒரு நிச்சய உணர்வு ஏற்படும். இந்த உணர்வு ஏற்பட செல்லும் நேரம் நீங்கள் இவ்வாறான சூழல்களுக்கு பதிலளிக்கும் விதத்தை பொறுத்து அமைகின்றது. எனவே உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் நம்பிக்கைக்குரிய ஒரு வயது வந்தவருடன் கதைக்கவும்.

4. சம வயதினரின் அழுத்தம்

கட்டிளமைப்பருவத்தை அடையும் போது நீங்கள் உங்கள் சம வயது குழுக்களுடன் செலவிடும் நேரம் அதிகரிக்கும். நீங்களும் உங்கள் நண்பர்களும் உங்கள் சுற்றுச்சூழலில் சமூகத்தில் காணப்படும் விடயங்கள் முக்கியமாக ஊடகங்களில் பிரபலமாகும் விடயங்கள் பால் ஈர்க்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் உடை அணியும் விதம், நீங்கள் பேசும் விதம் மற்றும் உங்கள் நடத்தை கூட பிரபலமானது என்று நீங்கள் கருதும் விடயங்களை பொறுத்து மாறலாம்.

உங்கள் விருப்பு வெறுப்புகள் அடிக்கடி மாற்றமடையலாம். உங்கள் சம வயது குழுக்களில் ஏற்றுக்கொள்ளப்பட நீங்கள் இவற்றை செய்யலாம். நீங்கள் எடுக்கும் சில முயற்சிகள் இதுவரை உங்கள் பெற்றோர் மற்றும் பெரியவர்கள் உங்களுக்குச் சரியானது என்று முடிவு செய்ததில் இருந்து வேறுபட்டிருக்கலாம். இந்த விடயங்கள் உங்களை சோர்வடையச் செய்யவும் கூடும். எனவே உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் நம்பிக்கைக்குரிய ஒரு வயது வந்தவருடன் கதைக்கவும்.

5. மனநிலை உணர்ச்சிகள் அடிக்கடி மாற்றமடைதல்

நிச்சயமற்ற உணர்வுடன் மேலதிகமாக, பூப்படையும் பருவத்தின் போது உங்கள் உணர்வுகளும் அடிக்கடி மாறலாம். உதாரணமாக, ஒரு கணம் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கலாம், அடுத்த கணம் நீங்கள் மிகவும் சோகமாகவோ அல்லது கவலையாகவோஉணரலாம். இது பூப்படைதலின் போது உங்கள் உடலின் புதிய ஹார்மோன்கள் சுரப்பதினாலும் அதன் செயற்பாடுகளினால் அவற்றின் அளவு அதிகரித்து குறைவதனாலும் ஏற்படுகிறது. இது இயற்கையான செயற்பாடாகும். இவ்வாறான உணர்வு மற்றும் மனநிலை மாற்றங்கள் உங்கள் வாழ்வு கல்வி போன்றவற்றை பாதிக்கின்றது என நீங்கள் நினைத்தால், அல்லது வேறு ஏதேனும் சவால்களுக்கு நீங்கள் முகம்கொடுத்தால் உங்கள் பாடசாலை ஆலோசகர் (counselling teacher), குடும்பத்தில் ஒருவருடன் அல்லது ஒரு நெருங்கிய நண்பரிடம் இது குறித்து பேசவும்.

6. பாலியல் உணர்வுகள் ஏற்படல்

பூப்படையும் பருவத்தில், ​​உங்கள் உடல் பாலியல் ரீதியாகவும் முதிர்ச்சியடைகிறது. அநேகமானோர் இக்காலகட்டத்தில் சுயஇன்பம் காண்பதை முயற்சி செய்கிறார்கள். இப்பருவத்தில், பாலியல் தொடர்பான விடயங்கள் பற்றி அறிய ஆர்வம் ஏற்படுவதுடன் நாம் விரும்பக்கூடிய சில நபர்கள் மீது ஈர்ப்பும் ஏற்படுகின்றது. பருவமடைந்த காலத்தில் பெண் அல்லது ஆண் மீது ஈர்ப்பு ஏற்படுவது இயல்பு. கட்டிளமைப்பருவத்தில் ஒரு ஆண் அல்லது பெண் மீது ஈர்ப்பு ஏற்படுவது இயற்கையானதாகும்.

நாளாந்த செயல்பாடுகளில் ஈடுபடும் போதும் பாலியல் தூண்டுதல்கள் ஏற்படலாம். உதாரணமாக; ஒரு காதல் நாவலைப் படிப்பதன் மூலமோ அல்லது திரைப்படத்தைப் பார்ப்பதன் மூலமோ, நீங்கள் இதுவரை உணராத ஒரு உணர்வை உணரக்கூடும். இந்த உணர்வுகள் இயற்கையானவை. அதற்காக நீங்கள் குற்ற உணர்வு கொள்ளாதீர்கள். பாலியல்பு மற்றும் பாலியல் நடத்தை பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால், நம்பிக்கைக்குரிய ஓர் வயது வந்தவரிடம் இது குறித்து கலந்துரையாடுங்கள். பாடசாலை சுகாதார ஆசிரியர்கள் மற்றும் கவுன்சிலின் ஆசிரியர்கள் இதுபோன்ற விடயங்களை கலந்துரையாடுவதற்கான பயிற்சி பெற்றுள்ளனர் நீங்கள் அவர்களின் ஆதரவையும் நாடலாம்.. அல்லது, யொவுன் பியாசவிற்கு உங்கள் கேள்விகளை அனுப்புங்கள்.

So, do you think you know about this leason?

Challenge yourself and your friends to test your knowledge, take the quiz

In trouble?

Find those who will help

Access to these contraceptives is made easy through public hospitals and health centers where they are provided for free. Families can talk to doctors and nurses to learn about.

1983 : call free helpline to eradicate violence against women

Related Reading