
பால் (Sex) மற்றும் பாலினம் (Gender) எனும் வார்த்தைகள் இரண்டும் அநேகமான நேரங்களில் ஒரே அர்த்தத்தை வழங்கும் விதத்தில் மாறி மாறி பயன்படுத்தப்படுகின்றது. எவ்வாறிருப்பினும் இந்த இரண்டு வார்த்தைகளும் வெவ்வேறு அர்த்தங்கள் கொண்டவை.
பால் : பெயர்ச்சொல்
பால் என்பது ஒரு நபரின் உடலில் அமைந்துள்ள பாலியல் உறுப்புக்களுக்கு அனைய வழங்கப்படும் அடையாளப்படுத்தலாகும். ஆண் பெண் பாலியல் உறுப்புக்கள் தவிர இரு பால் உறுப்புக்களும் அமைந்துள்ள இடைஇலிங்க நபர்களும் உள்ளனர்.
பால் சார்ந்த பண்புகளின் உதாரணங்களை கீழே காணலாம்:-
* பெண்களில் யோனிக்குழாய் அமைந்திருக்கும். ஆண்களில் ஆணுறுப்பு அமைந்திருக்கும்
* பெண்களிள் கற்படையும் தன்மை மற்றும் குழந்தைக்கு தாய்ப்பால் பால் ஊட்டும் தன்மை காணப்படும்.
* ஆண்களுக்கு பெண்களை விட தடிப்பமான குரல் காணப்படும்.
* ஆண்களில் விந்து காணப்படுவதுடன் பெண்களில் சூல் காணப்படும்.
தம்மில் அமைந்துள்ள பாலியல் உறுப்பு குறித்த தெளிவான தெரிவை மேற்கொள்ள முடியாதவர்கள் அல்லது பெண் மற்றும் ஆண்களை விட வித்தியாசமான பாலியல் உறுப்புக்களை கொண்டவர்கள் இடைஇலிங்கத்தவர் என அழைக்கப்படுகின்றனர்.
பாலினம் என்பது, ஆண்கள் மற்றும் பெண்கள் எவ்வாறு சமூகத்தில் நடந்து கொள்ள வேண்டும் எனும் சமூக கருத்தியல் சார்ந்தது. பாலினம் என்பது சமூகத்தில் ஆண் மற்றும் பெண்ணாக நாம் வெளிப்படுத்தும் குணவியல்புகள், செய்யும் செயற்பாடுகள், நாம் சமூகத்தில் நடந்து கொள்ளும் விதம் மற்றும் எம் எதிர்பார்ப்புகள் பாலினத்தை குறிக்கிறது. ஆண் மற்றும் பெண் எனும் பாலை கடந்து சமூகப்படுத்தல் கருத்தியல் எனவும் இது அழைக்கப்படுகின்றது.
அதாவது எமது பால் சார்ந்து சமூகம் எமக்கு வழங்கும் சமூகமயமாக்கல் எதிர்பார்ப்பு. யோனியை கொண்டிருந்தால் அவர் சமூகத்தில் ஒரு பெண்ணாக நடந்து கொள்ள வேண்டும் மற்றும் ஆணுறுப்பை கொண்டிருந்தால் சமூகத்தில் ஒரு ஆணாக நடந்து கொள்ள வேண்டும் எனும் பாரம்பரிய கருத்தை சவாலுக்குற்படுத்தும் நபர்களும் எம் சமூகத்தில் உள்ளனர். தம் சமூக வகிபாகம் மற்றும் தாம் நடந்துகொள்ளும் விதம் தம் பாலியல் உறுப்பை பொறுத்து அமையக்கூடாதென அவர்கள் கூறுகின்றனர்.
මේ ගැහැණු ළමයෙක්
මේ පිරිමි ළමයෙක්
මේ දෙන්න එකට සෙල්ලම් කරනවා
( ගැහැණු ළමයාව ඇද ගෙන විත් ගෙදර තමයි)
ගැහැණු ළමයාට බොනික්කෙක් දී මුල්ලට තල්ලු කරයි
ගැහැණු ළමයා එලිය යාටම උත්සහ කරයි.
පිරිමි ළමයා ගැහැණු ළමයාට සෙල්ලම් කිරීමට කතා කරයි.
පිරිමි ළමයාට දොර වැසේ
පිරිමි ළමයා දොර ලග ඉදගෙන හඩයි
පිරිමි ළමයාට අඩන්න නොදී කට වසයි
ගැහැණු ළමයා අඩයි.
කෑම මේසයයේ ගැහැණු ළමයා සහ පිරිමි ළමයා
ගැහැණු ළමයාට කෑම පෙඩ්ඩක් බෙදයි. කෑම දෙසා බලා ගැහැණු ළමයාට දුක සිතෙ.
පිරිරි ළමයාට කෑම ගොඩක් බෙදයි. පිරිමි ළමයා ගේ ඇස් උඩ යයි.
පිරිමි ළමයා කෑම ටිකක් ගැහැණු ළමයටා දයි. එය නැවත ගෙන පිරිමි ළමයාගේ පිගානට දමයි.
පිරිමි ළමයාට බලෙන් ඒය කවයි
පිරිමිළමයාගේ හිස් පිගාන ගැහැණු ළමයාට දේ.
ගැහැණු ළමයා දුකෙන් පිගන් දෙක රැගෙන යයි.
அதனால் சமூகம் விதித்த இருமைக்கு அப்பால் செல்லும் ஒரு ஒரு விடயமாக நாம் இதை புரிந்து கொள்ள வேண்டும். அதாவது நாம் ஆண் பெண் என்ற இரண்டு பிரிவுகளாக மட்டும் மனிதரை பிரிக்க முடியாது.
சமூகமயமாக்கல் சமூகத்திலிருந்து கற்றுக் கொள்ளப்படுகிறது. ஒரு சமூகமயமாக்கல் தொடர்பான நம்பிக்கைகள் கலாச்சாரங்களுக்கமைய மற்றும் காலமாற்றத்திற்கமைய மாறுபடும்.
* ஆண்களை விட பெண்கள் வீட்டு வேலைகளை செய்வார்கள்.
* பெண்கள் மென்மையான குணம் படைத்தவர்கள்
* ஆண்கள் ஆதிக்க தன்மை மற்றும் வன்முறை குணமுள்ளவர்கள்.
* பெண்கள் கூந்தலை நீளமாக வளர்க்க வேண்டும்.
சமூக விதிமுறைகள் என்பன சமூகத்தில் ஆண்களும் பெண்களும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் முறைசாரா விதிகள் ஆகும்.
உதாரணமாக, பெண்களுக்கு சிறு பிள்ளைகள் இருந்தால் அவர்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்து அவர்களை பார்த்துக்கொள்ள வேண்டும். ஆண்கள் வேலை செய்து குடும்பத்தை கவனிக்க வேண்டும். போன்ற விதிமுறைகள் காணப்படுகின்றன. இவ்வாறான சமூக விதிமுறைகள் காணப்படுவதால் அவை தனி நபர்கள் தம் திறன்களை பயன்படுத்த முடியாத சூழலை ஏற்படுத்தலாம். இவ்வாறான விதிமுறைகள் சில அநீதிகளுக்கு வழிவகுக்கும்.
சமூகமயமாக்கல் தொடர்பாக காணப்படும் கருத்தியல்கள் சமூகத்தில் ஒரு நபர் பெண்மை, ஆண்மை தன்மையின் அடிப்படையில் ஒரு வித குணவியல்பை நடத்தையை கொண்டிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன. உதாரணமாக: ஆண்கள் கணிதத்தில் சிறந்தவர்கள் பெண்கள் குழந்தைகளை பராமரிப்பதில் சிறந்தவர்கள் போன்ற கருத்துக்கள்.
சமூக கட்டமைப்பின் மூலம் ஆண்கள் அல்லது பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட எந்தவொரு செயலையும் நம்மில் யாரும் செய்யலாம். ஏனெனில் ஆண்கள் செய்யும் அனைத்தையும் பெண்களாலும் செய்ய முடியும். மேலும், பெண்கள் செய்யும் அனைத்தையும் ஆண்களும் செய்யலாம். சமுதாயத்தில் சமத்துவம் இருந்தால், ஒவ்வொருவரும் மனிதர்களாக தங்கள் திறன்களை முழுமையாக பயன்படுத்தலாம்.
பெண்களை ஒடுக்கும் பல பழக்கவழக்கங்களை நாம் அறிவோம். பெண்கள் கண்ணியமானவர்கள், அமைதியானவர்கள், வெள்ளையாக இருக்க வேண்டும், அழகானவர்கள், ஆண்களை விட பெண்கள் கடினமாக வேலை செய்கிறார்கள் போன்றவை இதற்கு சில உதாரணங்கள்.
இவ்வாறான கருத்தியல்களினால் பெண்களுக்கு பல சவால்கள் ஏற்படுகின்றன, அது மட்டுமல்லாது அவர்கள் கண்ணியமாக, அமைதியாக, வெள்ளையாக, அழகாக இருக்க அதிக முயற்சிகளை எடுக்கின்றார்கள் அத்துடன், வீட்டு வேலைகள் செய்வது, படிப்பது போன்றவற்றிற்கும் அதிக முயற்சிகளை செகின்றார்கள். ஆண்பிள்ளைகளை இவ்வாறு சிரமப்படுத்தும் கருத்தியல்கள் காணப்படுகின்றனவா?
ஆண்பிள்ளைகள் விளையாட்டுத்தனமானவர்கள், கணிதத்தில் சிறந்தவர்கள், ஆண்பிள்ளைகள் அழக்கூடாது போன்ற கருத்துக்கள் ஆண்பிள்ளைகளுக்கு அழுத்தம் கொடுப்பதில்லையா?
Challenge yourself and your friends to test your knowledge, take the quiz
Access to these contraceptives is made easy through public hospitals and health centers where they are provided for free. Families can talk to doctors and nurses to learn about.