
திட்டமிடாத கர்ப்பத்தை தவிர்ப்பதற்கான சிறந்த வழிமுறை பாலியல் உறவில் ஈடுபடாது இருப்பதாகும். நீங்கள் பாலியல் உறவில் ஈடுபட்டால் இதற்கான சிறந்த தீர்வு கருத்தடை முறை / குடும்பத்திட்டமிடல் முறையொன்றை பயன்படுத்துவதாகும். கருத்தடை/ குடும்பத்திட்டமிடல் முறைகள் கருத்தரிப்பை தவிக்க பயன்படுத்தப்படும் முறைகள்
கருத்தடை/ குடும்பத்திட்டமிடல் முறைகள் செயலிழந்தால் அல்லது அவை பாவிக்காது பாலியல் உறவில் ஈடுபட்டால் அந்நேரத்தில் எதிர்பாராத கர்ப்பத்தை தவிர்க்க அவசர கருத்தடை முறைகளை பயன்படுத்தலாம்.
அவசர கருத்தடை முறை, பாலுறவுக்கு பின்னரான கருத்தடை முறை என அழைக்கப்படுவதன் காரணம்,
1. பாலியல் வன்புணர்விற்கு முகம்கொடுத்த சந்தர்ப்பம்
2. பாதுகாப்பற்ற பாலுறவின் பின்
3. அல்லது தற்போது பாவிக்கும் கருத்தடை/ குடும்பத்திட்டமிடல் முறை செயலிழந்த பொது (உதாரணம்: ஆணுறை (கொண்டம்) கிழிவது போன்ற சந்தர்ப்பங்களில் திட்டமிடாத கர்ப்பத்தை தவிர்க்க பயன்படுத்தும் முறை.
அவ்வாறு பயன்படுத்தக்கூடிய மூண்டு முறைகள் நீங்கள் கீழே காணலாம்.
இவை புரோஜெஸ்டெரோன் எனும் ஹோர்மோன்கள் அடங்கிய மாத்திரைகள்.
0.75 கிராம் மாத்திரைகள் இரண்டு அல்லது 1.5 மில்லிகிராம் மாத்திரை ஒன்று என என இவற்றை மருந்தகங்களில் (பார்மசி) பெற்றுக்கொள்ளலாம்.
நீங்கள் வாங்கும் பக்கெட்டில் 2 மாத்திரைகள் இருந்தால், முதல் மாத்திரையை அறுந்தி 12 மணித்தியாலங்களின் பின் அடுத்த மாத்திரையை அருந்தலாம். இரண்டு மாத்திரைகளையும் ஒரே நேரத்தில் அருந்தவும் கூடும், அது பிரச்சனை இல்லை. நீங்கள் வாங்கும் பக்கெட்டில் கூறப்பட்டுள்ள படி மாத்திரைகளை அருந்துங்கள். அனைத்து பெண்களுக்கும் அவசர நேரத்தில் இந்த மாத்திரைகளை பாதுகாப்பாகவும் வினைத்திறனுடனும் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது.
பாதுகாப்பற்ற பாலியல் உறவின் பின் கூடிய விரைவில் இதனை அருந்துவது இதன் பலனளிக்கும் தன்மையை அதிகரிக்கிறது.
பாதுகாப்பற்ற பாலியல் உறவின் 5 நாட்களின் பின்னர் இந்த மாத்திரைகளை அருந்தினால் பலனை எதிர்பார்க்க முடியாது.
அவசர கருத்தடை மாத்திரைகள் மூலம் முட்டை அல்லது சூழ் வெளியேற்றம் (ovulation) தடை அல்லது தாமதம் செய்யப்படுகின்றது, இதன் மூலம் கர்ப்பம் தவிர்க்கப்படுகின்றது.
அவசரக்கருத்தடை முறைகள் மூலம் ஏற்கனவே காணப்படும் கர்ப்பத்திற்கோ கருவிற்க்கோ எவ்வித ஆபத்துக்களும் பாதிப்பும் ஏற்படாது.
இது சூழ் வெளியேற்றத்தை ஹோர்மோன்கள் மூலம் தாமதம் செய்வதனால், ம்மாதவிடாய் சக்கரத்தில் மாற்றங்கள் ஏற்படலாம், மாதவிடாய் ஒரு வாரத்திற்கு மேல் தாமதமடைந்தால் ஒரு கர்ப்ப பரிசோதனை செய்து கொள்ளலாம்.
நீங்கள் தொடர்ச்சியாக பாதுகாப்பற்ற பாலியல் உறவில் ஈடுபட்டால், கர்ப்பத்தை தடுக்க ஒரு குடும்பத்திட்டமிடல் முறையை பயன்படுத்தவும்.
இது நாளாந்த பாவனைக்கான ஒரு கருத்தடை முறை அல்ல என்பதை நினைவில் கொள்ளவும்.
பாதுகாப்பற்ற பாலியல் உறவில் ஈடுபட்ட 5 தினங்களுக்குள் லூப் என அழைக்கப்படும் கருப்பையில் உட்பதிக்கும் சாதனத்தை உட்பதிக்க வேண்டும். இது கருப்பையினுள் கரு உட்பதிக்கப்பட பொருத்தமற்ற சூழலை உருவாக்கும். இது ஒரு வைத்தியரால் ஒரு சிகிச்சை நிலையத்தில் செய்யப்பட வேண்டும்.
பாதுகாப்பற்ற பாலியல் உறவின் பின் கூடிய விரைவில் (72 மணித்தியாலங்களுக்குள்) ஹோர்மோன்கள் அடங்கிய மாத்திரைகள் 4கை அருந்தி அதன் பின் 12 மணித்தியாலங்களின் பின் மேலும் 4 ஹோர்மோன்கள் அடங்கிய மாத்திரைகளை அருந்த வேண்டும்
Challenge yourself and your friends to test your knowledge, take the quiz
Access to these contraceptives is made easy through public hospitals and health centers where they are provided for free. Families can talk to doctors and nurses to learn about.